2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மரமுந்திரிகை விளைச்சல் பாரிய வீழ்ச்சி

Freelancer   / 2023 மே 25 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கை அறுவடை ஆரம்பித்திருக்கிறது. 

இம்மாவட்டத்தில் இம்முறை மரமுந்திரிகைச் செய்கை விளைச்சல் பாரிய வீழ்ச்சியைத் தந்திருப்பதாக மரமுந்திரிகைச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்த மழை மற்றும் கடுமையான வெப்பமான காலநிலையே இதற்கான காரணமென செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பூக்கள் கருகி காய்க்கும் வீதம் பெருமளவில் குறைவடைந்துள்ளதாகவும் இதன் காரணத்தால் மரமுந்திரிகை செய்கையாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 400 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்ததாபன மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எச்.பி.டி.தயாரத்ன தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவுகளில் அதிகளவில் மரமுந்திரிகை செய்யப்பட்டதாகவும் வாழைச்சேனை, கிரான், செங்கலடி மற்றும் வாகரை பிரதேச செயலகப்பிரிவுகளிலும் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்முனை- மட்டக்களப்பு பிராதான வீதியில் அதிகளவான மரமுந்திரிகைப் பழங்கள் தெருவோர கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .