2025 மே 19, திங்கட்கிழமை

மாட்டுப் பட்டியடியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக கரடியனாறு பொலிஸ் பிரிவின் காரைக்கட்டு பகுதியில் மாடுகளைப் பராமரிக்கும் இளைஞன் ஒருவரின் சடலத்தை, இன்று (15) காலை தாம் மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், காரைக்கட்டு பகுதியைச் சேர்ந்த அழகையா அற்புதன் (வயது 20) என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞன், வழமையாக மாடுகள் மேய்க்கும் தொழிலையே கொண்டிருந்தவர் என்றும் தைப்பொங்கல் தினத்துக்கு மறுநாள் இன்று திங்கட்கிழமை வழமைபோன்று பட்டிப் பொங்கல் பொங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பட்டிப்பொங்கல் தினத்தன்று, மாட்டுப் பட்டியடியிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், இம்மரணத்துக்கான காரணம் பற்றி விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சடலம் உடற் கூறு பரிசோதனைக்காக, செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X