Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை – திருக்கோவில் முறாவோடை கடற்கரையில், புதன்கிழமை(12) மாலை கடலில் நீராடச் சென்று காணாமல் போன 15 வயது மாணவனின் சடலம், விநாயகபுரம் சவுக்கடி கடற்கரையில் இன்று (14) கரையொதிங்கியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் சக்தி வித்தியாலயத்தில், தரம் 10இல் கல்வி கற்றுவந்த விநாயகபுரம் 01 கலைமகள் வீதியைச் சேர்ந்த நிக்சன் நிலுக்சன் (15) என்ற சிறுவனே, உயிரிழந்துள்ளார்.
மேற்படி சிறுவன் திங்கட்கிழமை (10) தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்றபோது, கடலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்டார் என்றும் ஐந்து நாள்களுக்குப் பின்னர் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
21 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
30 minute ago