2025 மே 08, வியாழக்கிழமை

மார்க்கக் கடமைக்குச் சென்றவர் விபத்தில் சிக்கி மரணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“உம்றா” மார்க்கக் கடமையை மக்கா சென்று முடித்து விட்டு, நாடு திரும்பியிருந்த நிலையில், உறவினர்களைப் பார்க்கச் சென்ற யாத்ரீகர், செல்லும் வழியிலேயே விபத்திச் சிக்கி மரணமடைந்த சம்பவம், ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சந்திவெளியில் இடம்பெற்றுள்ளது.

மரணமடைந்த அண்ணல் நகர், கிண்ணியாவை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் மஹ்ரூப் (வயது 60)  என்பவரின் சடலம், மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இவர் கிண்ணியாவிலிருந்து, சாய்ந்தமருதிலுள்ள தனது மகளைப் பார்க்கச் செல்லும் வழியில் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை சந்திவெளியில் இந்த விபத்தைச் சந்திக்க நேரிட்டது.

அவர் செலுத்திச் சென்ற ஓட்டோ, வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் பின்புறமாகச் சென்று மோதியதில், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த ஓட்டோவில் அவருடன் பயணித்த மனைவி, மனைவியின் தங்கையின் 4 வயதான குழந்தை ஆகியோர் காயங்களுக்குள்ளாகினர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துத் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X