2025 மே 19, திங்கட்கிழமை

‘மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் பிரதிநிதித்துவம் கைமாறிப் போய்விடும்’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஜனவரி 18 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் தமிழர் பிரதிநிதித்துவம் கைமாறிப் போய்விடும்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

 

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தமிழ் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் வாகனேரி வட்டார வேட்பாளர் வை.யோகேஸ்வரனின் காரியாலயத்தை வாகனேரி பிரதேசத்தில் நேற்று (17) மாலை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிசமான முறையில், தமிழ் விடுதலைக் கூட்டணி கட்சியினர் கைப்பற்றுவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

“வாகனேரி வட்டார வாக்குகளைப் பெற்று ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெறக் கூடிய வழிமுறைகளில் தேசிய கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. நீங்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலமே பிரதேசத்தை தக்க வைக்க முடியும். மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் தமிழர் பிரதிநிதித்துவம் கைமாறிப் போய்விடும்.

“வாகனேரிப் பிரதேசத்தில் மீண்டும் மணல் அகழப்படும், குளத்தில் மீன் பிடிக்கப்படும், அத்துமீறல்கள் நடைபெறும். இவ்வாறு பல விடயங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளதுன. தற்போதும் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்க எமக்கு இந்தகட கிராம அதிகாரம் தேவையாக உள்ளது. அப்போதுதான் பிரதேசத்தை காப்பாற்ற முடியும். இல்லையேல், வேறு இனத்தவர்கள் வெளியில் இருந்து வந்து இங்கு ஆட்சி புரிகின்ற நிலைமை காணப்படும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X