Janu / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - குடும்பிமலை பிரதேசத்தில் பண்ணை ஒன்றில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி மாமன் மருமகனாகிய இரு விவசாயிகள் உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பிமலையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆறுமுகம் லோகநாதன், பலிபாய்ந்த கல்லைச் சேர்ந்த 21 வயதுடைய விநாயகமூர்த்தி சுதர்சன் ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பிமலை - ஈச்சையடி பகுதியில் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணையை வாழைச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து செய்துவரும் நிலையில் காட்டு விலங்குகள் உள்நுழைவதை தடுப்பதற்காக சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்று பண்ணையை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளார்.
குறித்த பண்னைபகுதியை அருகில் வேளாண்மை அறுவடைக்கு சென்று மாமனாரும் மருமகனும் திங்கட்கிழமை (12) சென்றுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை (13) காலை பணனைக்கு சென்ற உரிமையாளர் மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதை கண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
கனகராசா சரவணன்
5 minute ago
7 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
4 hours ago