2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்கள் மீது தாக்குதல்: விசாரணைகள் ஆரம்பம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஜூலை 26 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுகுணாவை குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர்கள் இருவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டது பற்றி தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (25) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், தாந்தாமலை கிராம மீனவர் சங்கத்தின் தலைவரும் அதன் உறுப்பினர்களுமே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இனந்தெரியாதோர் தம்மைத் தாக்கியவிட்டு, தம்மிடம் இருந்த மீன்பிடி வலைகளையும் அலைபேசிகளையும் பறித்துத் தப்பியோடிவிட்டதாக, சம்பவத்துக்கு முகங்கொடுத்த மீனவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தையடுத்து, மீனவர்களிடையே பதற்ற நிலையேற்பட்டுள்ளதாகவும், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில், இது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமைய விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X