எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 நவம்பர் 20 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிறுக்கும் அளக்கும் தராசுகள் மற்றும் கருவிகளுக்கு முத்திரை இடாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, மட்டக்களப்பு மாவட்ட அளவைகள் நிறுவைகள் மாவட்ட உத்தியோகத்தர் ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
அளக்கும் நிறுக்கும் கருவிகள் மற்றும் தராசுகளுக்கு, 2017ஆம் - 2018ஆம் ஆண்டுக்கான முத்திரை பதிக்கும் நடவடிக்கைகள், கத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச்சங்க கட்டடத்தில் இடம்பெற்று வருகின்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“வருடாந்தம் முத்திரை பதிப்பது அவசியமாகும். யாராவது முத்திரை பதிக்காமல் நிறுக்கும் அளக்கும் தராசுகள் மற்றும் கருவிகளை பயன்படுத்தியதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இது தொடர்பில் வர்த்தகர்கள் கவனமெடுப்பது அவசியமாகும்” எனவும் அவர் தெரிவித்தார்.

1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago