Princiya Dixci / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், நடராஜன் ஹரன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளிக்குச் சென்ற மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஓட்டோவை தனியார் போக்குவரத்து பஸ்ஸொன்று மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் ஓட்டோவை ஓட்டிச்சென்ற தந்தையும் அதில் பயணம் செய்த முன்பள்ளி மாணவியும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன், பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பஸ்ஸும் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
5 minute ago
22 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
33 minute ago