Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இந்த நாட்டில் தமிழரோ, முஸ்லிமோ, சிங்களவரோ, சிறுபான்மையாக உள்ள இடங்களில் முழு சுதந்திரமும் உரிமையும் உடையவராக வாழ்வதற்கேற்ற வகையில் இலங்கை மீளமைக்கப்பட வேண்டும். அதுவே தற்காலத் தேவை” என, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
தற்போதைய உள்ளூராட்சித் தேர்தல் முனைப்புகள் மற்றும் நாட்டு நடப்புகள் தொடர்பாக அவர் இன்று (14) கருத்து வெளியிட்டார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“இலங்கை ஓர் அதிகாரப் பகர்வு நாடா, ஒற்றையாட்சி நாடா என்ற விவாத்துக்கு அப்பால் அனைத்து இனங்களுக்கும் சமமான உரிமைகளும் சுதந்திரமும் வழங்கப்பட்டு, அதனை நாட்டு மக்கள் அனுபவிக்கின்ற நாடாக உள்ளதா என்பதே முக்கியமானதாகும்.
“நாட்டில் வாழும் சகல சமூகங்களுக்குமான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படும் வகையிலான ஏற்பாடுகள் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்ற விடயத்தை, ஆளும் தரப்பு சிரமேற்கொண்டு காரியங்களை முன்னெடுக்க வேண்டும்.
“அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் உள்ள “ஒருமித்த நாடு” என்ற பதத்தை முன்வைத்து, பாரிய குழப்பங்களை ஏற்படுத்தி, பெரும்பான்மை மக்களை குழப்பி சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்குமான பிரச்சினைகளை நீடிக்கச்செய்து அதில் தமது அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒரு சில குழுக்கள் முயற்சித்துக் கொண்டுள்ளன.
“அத்துடன், சிறுபான்மையின சமூகம் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கான தீர்வவை பெற்றுக்கொள்ள பெரும்பான்மையின இனவாதிகளைப்போல் சிறுபான்மையின புல்லுருவிகளிடமும் நாம் போராட வேண்டியுள்ளது.
“மாகாணங்களுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதுடன், ஆளுநர் தெரிவில் குறித்த மாகாண மக்களுடைய அங்கிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.
“மேலும், தேர்தல் முறை சீர்த்திருங்களிலும் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் குறித்து கூடுதல் கரிசனை செலுத்தப்பட வேண்டியுள்ளது,
“சிறுபான்மை சமூகங்களின் மத மற்றும் கலாசாரங்களை பின்பற்றுவதற்கான உரிமைகள் தொடர்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்பதுடன் அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுபவர்களுக்கு எதிரான கடுமையான சட்ட ஏற்பாடுகளும் உள்ளடக்கப்பட வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .