2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘முஸ்லிம் தலைவர்களின் ஏகாதிபத்தியம் நன்கு புலப்படுகின்றது’

வடிவேல் சக்திவேல்   / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ் மக்களுக்கு பாரிய அபிவிருத்தியை செய்துவிட்டுத்தான் நாங்கள் தமிழ் மக்கள் முன்னிலையில் வாக்கு கேட்டு வருகின்றோம். தமிழ் மக்களின் அபிலாசைகளை வேறு இனத்தவருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு வாக்கு கேட்டுவரவில்லை” என, தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

 

மேலும், “முஸ்லிம் தலைவர்களின் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தேசியம் பேசிப்பேசி எமது மக்களை ஏமாற்றி வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால், முஸ்லிம் தலைவர்களின் ஆதிக்கமும் ஏகாதிபத்திய குணமும் கூடிக் கொண்டு வருகின்றது” எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக இன்று (25) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“நாங்கள் தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியில் தையல் இயந்திரச் சின்னத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், போட்டியிடுகின்றோம். இந்தத் தேர்தலில் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் ஒருவரை உருவாக்குவதற்கான அடி அத்திவாரமாகக் கொண்டு போட்டியிடுகின்றோம்.  இந்த விடயத்தை கிழக்கு மாகாண மக்கள் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்.

“மீண்டும் கிழக்கு மாகாணத்தை குழப்புவதற்கு இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாங்கள் வடக்கு, கிழக்கு ரீதியாக பரந்துபட்டளவில் கிழக்கு தலைமையை உள்ளடக்கியதாக போட்டியிட்டு வருகின்றோம்.

எனவே, எமது கொள்கையும் வடக்கு - கிழக்கு இணைப்புதான். ஆனால் அதனுடன் கூடிய அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் எமது கட்சி குறியாக இருக்கின்றது. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தேசியம் பேசிப்பேசி எமது மக்களை ஏமாற்றி வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் முஸ்லிம் தலைவர்களின் ஆதிக்கமும் ஏகாதிபத்திய குணமும் கூடிக் கொண்டு வருகின்றது.

இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளும் போட்டியிடுகின்றது. அக்கட்சியைப் பொருத்தளவில் கருணாம்மானின் படத்தை ஒட்டி கருணாம்மானுக்கு சார்பாகத்தான் போட்டியிடுகின்றோம் என்று கூறி வெற்றி பெற்றிருந்தனர். இந்த காலகட்டத்தில் நான் வெளிநாட்டில் இருந்தேன் இதனால் நடந்தது ஒன்றுமில்லை ஆனால் நாங்கள் தற்பொழுது தனிக்கட்சி அமைத்து தற்போது இத்தேர்தலில் போட்யிடுகின்றோம். தமிழ் மக்கள் இந்த தேர்தலை சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X