2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மூலிகை மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

Editorial   / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரனினதும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தினதும் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்தில் இயங்கிவரும் கிளைப் பிரிவினருக்கு மூலிகை மரக்கன்றுகள், மாவட்ட செயலகத்தில் நேற்று (02) வழங்கி வைக்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தை நோக்கிய எதிர்காலம்” எனும் கோட்பாட்டுக்கமையவும் “வளமான நாடு - சுகாதாரமான சுற்று சூழல்” என்ற தொனிப்பொருளுக்கமையவும் இம்மூலிகை மரக்கன்றுகள்  வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்த மூலிகை கன்றுகளை தங்கள் வீடுகளிலே நட்டு, சிறந்த முறையில் பராமரிப்பதன் மூலம் நாட்டை வளம் மிக்க நாடாக மாற்ற வேண்டுமென மாவட்ட விவசாய பணிப்பாளர் கலிஸ் கேட்டுக்கொண்டார்.  

இந்நிகழ்வில்  மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீன், மாவட்ட விவசாயக் கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக கிளைப் பிரிவினரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .