2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி ஒருவர் மரணம்

Freelancer   / 2022 மே 04 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

கொக்கட்டிச்சோலை - சாமந்தியாறு பகுதியில் யானை தாக்கி ஒருவர் மரணமான சம்பவம் நேற்று(03) இரவு இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் கொக்கட்டிச்சோலை கிராமத்தினைச் சேர்ந்த  5 பிள்ளைகளின் தந்தையான வெள்ளத்தம்பி குமரகுரு (வயது 72) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு மூன்று யானைகள் குறித்த பகுதிக்குள் நுழைந்து,  வீட்டில் இருந்த மரங்களையும், பயிர்களையும் சேதப்படுத்திவிட்டு, குறித்த நபரின் வீட்டின் முன்னால் உள்ள காணியில்  உலாவியுள்ளது.

இதன்போது, குறித்த நபர் வீட்டை விட்டு வெளியில் சென்ற போது,  யானை தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் மரணமடைந்துள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X