Princiya Dixci / 2022 மார்ச் 30 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு - சந்திவெளி பிரதேசத்துக்கு பஸ்ஸில் கஞ்சாவை கடத்தி வந்து அதனை சந்திவெளி பகுதியிலுள்ள பற்றக்காட்டுப் பகுதியில் விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த யாழ்., பளை பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரை, நேற்று (29) மாலை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பற்றைக்காட்டுப் பகுதி முற்றுகையிடப்பட்டது. இதன்போதே, 165 கிராம் கேரளா கஞ்சாவை விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த நால்வரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், பளை, இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 29, 24, 24 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும் இவர்களில் ஒருவர், மட்டு. கல்குடா பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், இவர்களில் இருவர் பஸ்ஸில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர் எனவும் மற்றைய இருவர் மோட்டர் சைக்கிளில் சந்திவெளியை வந்தடைந்துள்னர் எனவும் பொலிஸ்ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago