2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

யாழ் .யாத்திரீகர் மாமாங்கத்தில் திடீர் மரணம்

Editorial   / 2023 மே 29 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

யாழ்ப்பாணம் செல்வச் சந்நதியிலிருந்து கடந்த மாதம் ஆறாம் திகதி முதல் பாதயாத்திரையில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாணம் யாத்திரீகர் ஒருவர் மட்டக்களப்பு மாமாங்கத்தில் திடீர் மரணமானார்.

இச் சம்பவம் நேற்று(29) திங்கட்கிழமை காலை 6:30 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த கே. சிவலிங்கம் (வயது 70 ) என்பவரே மரணமாகியுள்ளார்.

 யாழ்ப்பாணம் செல்வச் சந்நதியிலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் 62 பேர் கொண்ட யாத்திரிகர்கள் கடந்த 23 நாட்களாக பாதயாத்திரையில் ஈடுபட்டு வந்தனர்.

 ஞாயிற்றுக்கிழமை (28)  இரவு மட்டக்களப்பு மாமாங்கத்தை   வந்தடைந்த அவர்கள்   அங்கிருந்து புறப்பட இருந்தசமயம் இந்த மரணம் சம்பவித்திருக்கின்றது.

 மட்டக்களப்பு பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் மரணவிசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் சடலத்தை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு  உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 இது தொடர்பாக  பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி கூறுகையில்...

கடந்த ஏழு வருட காலமாக யாத்திரிகர் சிவலிங்கம் எங்களுடன் பயணித்து வருபவர்.     மாமாங்க ஆலயத்தில் பஜனை முடித்த பிற்பாடு நாங்கள் பணிஸ் மற்றும் தேநீரை அருந்திவிட்டு புறப்பட இருந்த சமயம் சிவலிங்கம் துள்ளி குதித்தாடி சந்தோஷத்தில் இருந்தார்.

 மறுகணம் அவர் மயக்கமுற்று சரிந்து விழுந்த உடனே நாங்கள் அம்புலன்ஸ்க்கும் 119க்கும் தகவல் கொடுத்தோம். அங்கிருந்து ம்புலன்ஸ் வருவதற்கு இடையில் அவரது உயிர் பிரிந்து விட்டது.

 எனவே ம்புலன்ஸ் பிரேதத்தை ஏற்ற முடியாது என்று கூறி சென்று விட்டார்கள்.

 இன்று பகல் கல்லடி ராமகிருஷ்ண மிஷினிலே எங்களுக்கு மதியபோசனமிருந்தது. இந்த வேளையிலே இந்த சம்பவ இடம்பெற்றது .எனது பாதயாத்திரை வரலாற்றில் பாதை யாத்திரையின் பொழுது ஒருவர் மரணித்த சம்பவம் இதுவாகத்தான் இருக்கின்றது. என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X