Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புனர்வாழ்வு அதிகார சபையால் முன்னெடுக்கப்படும் 2018ஆம் ஆண்டுக்கான சுயதொழில் கடனுதவித் திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக, புனர்வாழ்வு அதிகார சபை அறிவித்துள்ளது.
தொழில் முயற்சியாளர்களின் தொழில் விருத்தியை நோக்காக் கொண்டு இரண்டரை இலட்சம் ரூபாய், 4 சதவீத வட்டி அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புனர்வாழ்வு அதிகாரசபையின் சுயதொழில் விருத்திக் கடன் திட்டத்தின் கீழ், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2017 வரை 400 பேருக்கு, இலங்கை வங்கி ஊடாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கைத்தோழில் முயற்சிகள், கைவினைப் பொருட்கள் உற்பத்திகள் அடங்கலான சுயதொழில் முயற்சிகளுக்கு, இந்தக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத் திட்டமிடல் செயலகத்தின் புனர்வாழ்வுப் பிரிவைத் தொடர்புகொள்வதன் மூலம் இதற்கான விண்ணப்பப்படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago