Suganthini Ratnam / 2016 ஜூன் 16 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில்; யானைகளின் தாக்குதல்கள் காரணமாக 47 பேர் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் டி.எம்.வீரசிங்க தெரிவித்தார்.
அத்துடன், இதே காலப்பகுதியில் 14 யானைகள் இறந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் 253 யானைகள் இறந்துள்ளதுடன், 59 பொதுமக்களும் யானைகளின் தாக்குதல்களினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்டுவரும்; மோதல்களைத் தடுத்து மனிதர்களையும் யானைகளையும் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், '2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 5,800 யானைகள் உள்ளதாக தெரியவந்தது. பொலன்னறுவை மற்றும் அதனை அண்டிய மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலேயே அதிகளவான யானைகள் உள்ளன. இலங்கையில் சுமார் 25 சதவீதமான யானைகள் இப்பகுதிகளிலேயே உள்ளன' என்றார்.
'காடுகளுக்கு அருகில் குடியேற்றம், காடுகளில்; ஆக்கிரமிப்பு, காடுகளை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் உள்ளிட்ட செயற்பாடுகள் காரணமாக யானைகளின்; தாக்குதல்கள் அதிகரிக்கின்றன.
யானைகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யானைகளின் தாக்குதல்கள் இடம்பெறுவதாக இனங்காணப்பட்டுள்ள எட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கிராமங்கள் தோறும் 50 குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்களில்; 305 பேர் இணைக்கப்பட்டு அவர்களுக்கு யானைகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன' எனவும் அவர் மேலும் கூறினார்.
.


46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago