Freelancer / 2022 நவம்பர் 12 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
ரயில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு சென்ற ரயில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.
இந்தச் சம்பவம் சித்தாண்டி - முறக்கொட்டான்சேனை தேவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞன் சித்தாண்டி - 1, அலைமகள் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவகுமார் குவேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்துள்ள இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)

13 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago