Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் ஊடாக, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 30 பாடசாலைகளுக்கும் அப்பிரதேச மக்களுக்கும் குடிநீரும் சுகாதார வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்ட சாத்திய வள ஆய்வின் அறிக்கை, மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் நிமித்தம் நீர் விநியோகத்திட்டத்துக்கான செயற்றிட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக, வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட முகாமையாளர் நிலக்ஷி தவராஜா தெரிவித்தார்.
சுமார் 55 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள 30 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6,000 மாணவர்களும் பிரதேச மக்களும் தூய்மையான குடிநீரையும் சுகாதார வசதிகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளார்கள்.
2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத் துறையினரின் ஆய்வின்படி, வவுணதீவுப் பிரதேசத்தில் தூய்மையற்ற குடிநீரைப் பாருகுவதன் மூலம் வயிற்றுப்போக்கு உபாதைக்கு உள்ளாகும் சிறார்கள் 6.6 வீதம் எனக் கண்டறியப்பட்டுள்ளதற்கு அமைவாகவே, இந்தத் தூய்மையான குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நிலக்ஷி தவராஜா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
55 minute ago
1 hours ago