Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் அச்சுறுத்தலுள்ள 8 வாக்கெண்ணும் நிலையங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியைக் கோரியுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (20) மாலை நடைபெற்ற ஊடகவியலார்களுடனான கலந்துரையாடலின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் தெரிவித்ததாவது,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 457 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. வாக்கெடுப்பு நிலையங்களிலேயே, வாக்கெண்ணும் நடவடிக்கைளும் இடம்பெறவுள்ளன.
“தேர்தல் முடிந்தவுடனேயே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகி, வட்டாரத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர் அறிவிக்கப்படுவார்.
“பின்னர் ஒவ்வொரு வட்டாரமாகப் பெற்ற வாக்குகள் எமது ஒருங்கிணைப்பு நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டு, அங்கு வைத்து நாம் விகிதாசாரத்தை கணக்கிட்டு, விகிதாசார உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அறிவிப்போம்.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பிரசேத்திலுள்ள 8 வாக்கெண்ணும் நிலையங்கள், யானைகளின் அச்சுறுத்தலுள்ள நிலையங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
“இந்த நிலையங்களில் மாலை 6 மணிக்குப் பின்னர் வாக்கெண்ணுவதற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். இதனால் நாம் இந்த வாக்கெண்ணும் நிலையங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு, தேர்தல் ஆணைக்குழுவிடம் அனுமதியை கோரியுள்ளோம்.
“மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக, இந்த அனுமதியை கோரியுள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .