2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விசேட கலந்துரையாடல்

Janu   / 2023 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் கனரக வாகன இயக்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான   விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை  (28) இடம் பெற்றது.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ சந்திரகாந்தனின் பணிப்புரையின்  கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனம் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக கனரக  வாகன இயக்குனர்ளுக்கான நிகழ்ச்சித்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவில் தொழிலின்றி காணப்படும் இளைஞர்களின் தொழில் வாய்ப்பை   அதிகரிப்பதற்காக அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனம் ஊடாக இக் கற்கை நெறியை நாடாத்துவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இக் கற்கை நெறிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட  பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

ரீ.எல்.ஜவ்பர்கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .