Janu / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரணுக்கும் சர்வதேச தன்னார்வு தொண்டு நிறுவனமான IOM ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையலான விசேட சந்திப்பு செவ்வாய்கிழமை (20) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது, இடப்பெயர்விற்கான சர்வதேச அமைப்பாகிய IOM நிறுவனத்தினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் முறையான இடப்பெயர்வு தொடர்பாக மேற்கொண்ட திட்டங்கள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பு நல்லினக்கத்தினை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை தற்போது நடைமுறைப்படுத்தி வருவதுடன், எதிர்காலத்தில் தனிநபரல்லாத சமுக மட்ட செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது, மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் என்.நவனீதன் மற்றும் IOM நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
வ.சக்தி

6 minute ago
12 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
14 minute ago