Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்ளப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் நாவலடிப் பகுதியில் இன்று (14) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வியாபாரியொருவர் பலியாகியுள்ளாரென வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் ஜாமியுல் அக்பர் ஜும்மாப் பள்ளி குறுக்கு வீதியை அண்டி வசிக்கும் அஹமதுலெப்பை லாபீர் (வயது 62) எனும் 4 பிள்ளைளின் தந்தையே பலியானவராவார்.
இவர் வழமைபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து மடட்டக்களப்பு நோக்கி தனது படி ரக வாகனத்தில் வாழைப்பழக் குலைகளை ஏற்றிக்கொண்டு வரும்போது, ஓட்டமாவடி நாவலடிப் பகுதியில் வாகனத்தை ஓரமாக்கி, வீதிமருங்கில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்துள்ளார்.
அவ்வேளையில், அவ்வீதியால் வந்துகொண்டிருந்த லொறி இவரை மோதித் தள்ளியுள்ளது.
படுகாயமடைந்த அவர், உதவிக்கு விரைந்தோரால் உடனடியாக வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டபோதும் அவர் ஏற்கெனவே மரணித்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம், உடற் கூராய்வுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago