Princiya Dixci / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு,மண்முனை மேற்கு பிரதெச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வவுணதீவில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட கோப் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக அங்கிருந்த பொருள்கள் அனைத்து எரிந்து சாம்பராகியுள்ளன.
நேற்று மாலை குறித்த விற்பனை நிலையம் மூடப்பட்டதன் பின்னர் தீப் பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து, வவுணதீவு பொலிஸாரும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருள்கள் மற்றும் வர்த்தக நிலையத்திலிருந்த இலத்திரனியல் பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீ பரவலானது, மின் ஒழுக்கா அல்லது வேறு காரணங்கள் ஏதுவும் உள்ளதா என்பது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ காரணமாக குறித்த வர்த்தக நிலையத்துக்கு சுமார் 20 இலட்சம் ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் மக்களுக்கு மிகவும் விலை குறைந்த நிலையிலேயே பொருள்களை வழங்கி வந்ததாக ஈச்சந்தீவு-கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நாகலிங்கம் உருத்திரமூர்த்தி தெரிவித்தார்.


27 minute ago
35 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
46 minute ago