Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு நகரின் வீதியோரத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (13) கைது செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய வல்லிபுரம் அன்பழகன் என்பவரே, லொயிஸ் அவனியூர் வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்துக்கு அருகில் கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான விசாரணையில், அவ்வீதியில் இந்த சி.சி.டி.வி கமெரா சோதனையிட்டது.
அதில் உயிரிழந்தவரை இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இரு தடவைகள் பொல்லால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளதையடுத்து, அந்த இருவரும் அடையாளம் கணப்பட்டனர்.
நகர் பகுதியைச் சேர்ந்த 22, 21 வயதுடைய இளைஞர்கள் இருவரையும் சந்தேகத்தில் கைது செய்ததுடன், சம்பவத்துக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கியும் மீட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர், மதுபோதைக்கு அடிமையாகி, மனைவியைப் பிரிந்து, தாயாருடன் வாழ்ந்து வந்ததுடன், சம்பவ தினம் மதுபான விற்பனை நிலையத்துக்கு அருகில் ஆடையின்றி, வீதியில் கிடந்துள்ளார்.
அந்த வீதியால் மோட்டர் சைக்கிளில் பயணித்த மேற்படி இரு இளைஞர்களும், அங்கு பெண்கள் நடமாடி முடியாமல் இருந்தமையால், மதுபோதையில் விழுந்து கிடந்தவருக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகவும் அவரை திருத்துவதற்காகவும் தும்புத்தடி மற்றும் பொல்லால் காலை 8.20 மணிக்கு தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் மீண்டும் அந்த வீதியால் திரும்பிவரும் போதும், அவர் அவ்வாறே இருந்துள்ளதை கண்டு, மீண்டும் தாக்கிவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சலமாக மீட்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை நாளை திங்கட்கிழமை (15) இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
27 minute ago
5 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
5 hours ago
17 Aug 2025