Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 03 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடாசலை மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை சீடாஸ் ஸ்ரீ லங்கா நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
சீடாஸ் கனடா நிறுவனத்தின் 12 இலட்சம் ரூபாய் நிதியுதவியில், மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஏழு பாடசாலைகளைச் சேரந்த சுமார் 1,500 மாணவர்களுக்கு, முதற்கட்டமாக பாடசாலை உபகரணங்கள் வங்கிவைக்கப்பட்டன.
சீடாஸ் ஸ்ரீ லங்கா அமைப்பின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில், இன்று (3) நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் அ.சுகுமாரன், பொருளாளர் ஸே.சகாயராஜா, இணைப்பாளர் பு.புவிராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கல்குடா கல்வி வலயத்துக்கு உட்பட்ட மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயம், செங்கலடி விவேகாந்தா வித்தியாலயம், விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயம், பலாச்சோலை விபுலாந்தா வித்தியாலயம், உதயன்மூலை விவேகாந்தா வித்தியாலயம், குமாரவேலியார் கிராமம் சித்தி விநாயகர் வித்தியாலயம், மயிலவெட்டுவான் அ.த.க.பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago