Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வெள்ளப் பாதிப்புக்காக மக்கள் தங்குமிடங்களைக் கோரினால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, பாடசாலைகளை வழங்கத் தயாராக இருக்குமாறு, கல்குடா கல்வி வலயப் பணிப்பாளர், சகல அதிபர்களுக்கும் இன்று (21) அறிவித்துள்ளார்.
கல்குடா கல்வி வலய பிரதேசத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
வெள்ள அனர்த்தம் காரணமாக பொதுமக்களுக்கு தற்காலிக புகலிடங்களாகப் பாடசாலைகளைப் பயன்படுத்துவதற்கு பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் கோரினால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பாடசாலைக் கட்டடங்களை தாமதியாது வழங்குமாறு, கல்குடா வலய கல்விப் பணிப்பாளர், சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஏறாவூர்பற்று பிரதேச செயலாளரால் அனைத்து கிராம உத்தியோகர்களுக்கும் அவசர தயார் நிலை அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில், மழை காரணமாக தங்களது பிரதேசத்தில் ஏதேனும் இடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பின் உடனடியாக அனர்த்த முகாதைமத்துவப் பிரிவுக்கு அறிவிக்குமாறு அவர் கேட்டுள்ளார். .
அனைத்துக் கிராம உத்தியோகத்தர்களும் வெள்ள நிலைமையை உடனுக்குடன் அறிக்கையிடுவதுடன், கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்களை இயலுமானவரை தத்தமது வீடுகளில் அல்லது உறவினர் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க ஊக்கப்படுத்துமாறும், வெள்ள நிலைமை எல்லைதாண்டும் பட்சத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்துமாறும், ஏறாவூர்பற்று பிரதேச செயலாளரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
44 minute ago
2 hours ago