Suganthini Ratnam / 2016 ஜூன் 30 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்தியாய எனுமிடத்தில் நேற்றுப் புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபரும் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதில்; இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்றாவது நபர் சில மணிநேரங்களில் பலியானாதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரணமடைந்தவர்களில் மாணவர்கள் இருவரும் ஒரு கூலித் தொழிலாளியும் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெயந்தியாய கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் கரீம் ஹஸ்மிர் (வயது 16), சனூஸ் இம்தாத் (வயது 16) மற்றும் கூலித் தொழிலாளியான அதே கிராமத்தைச் சேர்ந்த நிஸ்தார் மிஸ்பாக் (வயது 20) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிள்களின் பின்னால் அமர்ந்து சென்ற முஹம்மத் ஷியாம் (வயது 30) என்பவர்
படுகாயங்களுக்குள்ளான நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
20 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
4 hours ago