Niroshini / 2016 மார்ச் 31 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'இலாபத்தில் இயங்கிய ஸ்ரீ லங்கன் விமான சேவை தற்போது 128 பில்லியன் ரூபாய் நஸ்டத்தில் இயங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஆச்சரியப்படத்தக்க செய்தியல்ல. ஆனால், இந்த நஸ்டத்துக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது' என பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
எமிரேட்ஸ் விமான சேவையின் முகாமைத்துவத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு 2008இல் கிடைத்த இலாபத் தொகை 9 பில்லியன் ரூபாய் ஆகும். அதே ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு கடந்த 7 வருடங்களில் ஏற்பட்ட மொத்த நஸ்டத் தொகை 128 பில்லியன்களாகும். ஸ்ரீ லங்கன் விமான சேவை எமிரேட்ஸ் உடன் கொண்டிருந்த ஒப்பந்தத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென 2008இல் முறித்துக் கொண்டதுவே இந்தப் பாரிய நஸ்டத்துக்கு காரணமாகும்.
2008ஆம் ஆண்டு நமது வரிப்பணத்தில் மஹிந்தவும் அவரது சகாக்களும் லண்டனுக்கான பயணமொன்றுக்கு சென்றிருந்த வேளை, அவர்களை முன்பதிவுகள் எதுவுமின்றி ஒரே விமானத்தில் இலங்கைக்கு அழைத்துவர வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கட்டளை இட்டார்.
குறித்த விமானத்தில் பயணிப்பதற்காக ஏற்கெனவே பதிவு செய்து கட்டணம் செலுத்திய பயணிகளை அப்புறப்படுத்த முடியாது என எமிரேட்ஸ் சொன்னது. இதனால் கோபமடைந்த மஹிந்த , ஸ்ரீ லங்கன் விமான சேவை 9 பில்லியன் ரூபாய் இலாபமீட்டுவதற்குத் தலைமை தாங்கிய பீட்டர் ஹில் என்பவரின் இலங்கைக்கான விசாவை இரத்து செய்து அவரை நாட்டை விட்டு அனுப்பினார்.
அதனைத் தொடர்ந்து எமிரேட்ஸ் தனக்கிருந்த பங்குகளை மஹிந்த அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியேறி விட்டது. இந்த வாய்ப்பையும் தனது குடும்பத்துக்காக பயன்படுத்திக்கொண்ட மஹிந்த, உடனடியாக ஸ்ரீ லங்கன் நிறுவனத்தின் தலைவராக தனது மைத்துனரான நிஸாந்த விகரமசிங்கவை நியமித்தார்.
அத்தோடு விமான சேவை நிர்வாகத்தில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாதவரான கபில சந்திரசேன அதன் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
அது மட்டுமின்றி முச்சக்கரவண்டி ஒன்றை கொள்வனவு செய்வது போல விமானங்களை கொள்வனவு செய்ய மஹிந்த அரசாங்கம் முனைந்தது.
சந்தை விலையிலும் பார்க்க பல நூறு மில்லியன் கூடுதல் விலை கொடுத்து யு330 மற்றும் யு350ஆகிய விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
இந்தப் பின்னணியில்தான் இன்று மீளமுடியாத கடன் சுமையில் ஸ்ரீPலங்கன்; இருக்கிறது. ஸ்ரீ லங்கன் சேவையை தொடர்வதென்றால் அடுத்த 6 மாதங்களுக்கு மாத்திரம் திறைசேரி 40பில்லியன் கொடுத்துதவ வேண்டியிருக்கும். இந்த விமான சேவையை யாருக்கும் விற்கவும் முடியாமல் தொடர்ந்தும் நடத்தவும் முடியாமல் இந்த அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
9 minute ago
14 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
25 minute ago
32 minute ago