Princiya Dixci / 2022 மே 10 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடியிலுள்ள வீட்டின் மீது நேற்று (09) மாலை கல் வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போது, காத்தான்குடி 3ஆம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது இந்தக் கல் வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் வீட்டின் முற்பகுதியிலுள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
9 minute ago
27 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
27 minute ago
45 minute ago
2 hours ago