Suganthini Ratnam / 2016 ஜூன் 20 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
'1987ஆம் ஆண்டு செயற்படுத்தப்பட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின்; மூலம் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்ட மாகாண சபையில் தற்போது வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்ட நிலையில் எதுவித அதிகாரமும் அற்ற நிலையில் நாங்கள் உள்ளோம்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
'கிழக்கு மாகாண சபையில் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற நிலையில் இல்லாமல், மூன்றாம் தரப் பிரஜைகள் என்ற நிலைக்கு செல்லக்கூடிய நிலைமையில் உள்ளனர்' எனவும் அவர் கூறினார்.
'கடந்தகால நிலையே இவற்றுக்கு காரணம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். கடந்த காலத்திலிருந்து புதிய பாடங்களை நாங்கள்; கற்றுக்கொள்ள வேண்டும்'; எனவும் அவர் கூறினார்.
ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமுமான பத்மநபா உட்பட உயிர்நீத்த போராளிகளின் 26ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வு, மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட தலைவர்கள் இருந்திருந்தால், இந்த நாட்டில் இடம்பெற்ற தமிழ் மக்களின் அழிவுகள் தடுக்கப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சிங்கப்பூராக மாற்றப்பட்டிருக்கும்' என்றார்.
'அரசியல் என்பது நாங்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் சேவையினை விட அவர்களின் உரிமையினைப் பெற்றுக்கொடுக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். அது ஏமாற்று அரசியலாக இருக்கக்கூடாது' எனவும் அவர் மேலும் கூறினார்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago