Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்
தற்போது இந்த நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டுமென உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்தார்.
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளிப் பிரதேசத்தில் பிரதேச கலாசார நிலையத் திறப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஒரு கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் இ;ந்த கலாசார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'தற்போது இந்நாட்டில் வித்தியாசமான அரசியல் நிலைமை நிலவுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாக உள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராக உள்ளார். தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சியாக உள்ளார். இதுவே புதுமையான அரசியல். எமக்குத் தேவையான அரசியல்.
எங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை நாம் பேசித் தீர்க்க வேண்டும். 30 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாம் ஒன்றுபட்டுச் செயற்பட்டு அந்த நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில் செயற்படுகின்றோம்.
வேறுபட்ட கலாசாரங்களை நாம் கொண்டிருந்தாலும், அந்தக் கலை ஊடாக இனங்களுக்கிடையில் நல்லுறவு கட்டியெழுப்பப்பட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
7 hours ago
8 hours ago