Suganthini Ratnam / 2017 ஜனவரி 25 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்,ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை பிரதேச சபையால் இடைநிறுத்தப்பட்டுள்ள சந்தைக் கட்டட நிர்மாண வேலையை மீண்டும் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி அப்பிரதேச சபையின் நுழைவாயிற் கதவை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று (25) ஈடுபட்டனர்.
பிரதேச சபை ஊழியர்களை உட்செல்ல விடாமலும் உள்ளிருந்த ஊழியர்களை வெளிவர விடாமலும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டனர்.
இது தொடர்பில் பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீனிடம் கேட்டபோது, '1967ஆம் ஆண்டு தொடக்கம் தற்போதுவரை இப்பிரதேச சபை இருந்த காணியை பிரதேச சபை பராமரித்து வருகின்றது. 2002.06.26 அன்று இடம்பெற்ற கலவரத்தின்போது, இப்பிரதேச சபைக் கட்டடம் தீக்கிரையாக்கப்பட்டது.
இதன் பின்னர், வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைக்காக வாடகை அடிப்படையில் இடத்தைப் பிரதேச சபை வழங்கி வந்தது. இந்நிலையில், அவ்விடத்தில் 6 வியாபாரிகளுக்கு கடை கட்டப்பட்டு வந்த நிலையில், தனி நபர் ஒருவர் பிரதேச சபை இருக்கும் காணி தனக்குச் சொந்தமானது எனக் கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனை அடுத்து, கடை கட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது' என்றார்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரதேச சபைக் காணியில் கடை கட்டப்பட வேண்டும் என்று ஆதரவு தெரிவித்திருந்தனர். இதற்கு மேல்மட்டத் திணைக்களத்திடமிருந்து ஒத்துழைப்புக் கிடைக்கும் பட்சத்தில் கடை மீண்டும் கட்டப்படும்' என்றார்.
இதனை அடுத்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

40 minute ago
40 minute ago
50 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
40 minute ago
50 minute ago
59 minute ago