Suganthini Ratnam / 2016 ஜூன் 10 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி சின்னத் தோணா கால்வாயை புனரமைப்பு செய்வதற்கென கிழக்கு மாகாண சபையின் மூலம் நெல்சிப் திட்டத்தினூடாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மீன்பிடி இலாகா வீதியில் அமைந்துள்ள சின்னத் தோணா கால்வாய் மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையினால் மழை காலங்களில் வெள்ளநீர் நிரம்பி அப்பகுதியிலுள்ள வீதிகள் மற்றும் அப்பகுதி மக்களின் வீடுகளினுள்ளும் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும் தோணா கால்வாயில் மழை நீர், கழிவுநீர் மற்றும் குப்பைகள் போன்றவைகள் தேங்கியுள்ளதனால் கோடை காலங்களில் கூட தோணாவிற்குள் துர்நாற்றம் வீசுவதோடு பல்வேறு சுகாதார சீர்கேடுகளையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
தற்போது இவ்வேலைத்திட்டதிற்கான விலை மனுக்கோரல் பத்திரிகைகளின் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக விரைவில் சின்னத் தோணாவின் முதற்கட்ட புனரமைப்புப்பனிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இத்தோணா கால்வாயை பார்வையிட்ட மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்; எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபை மூலமாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு சின்னத் தோணா கால்வாயினுடைய புனரமைப்பு வேலைகளை முழுமைப்படுத்தி அப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago