Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பைஷல் இஸ்மாயில், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பில் திண்மக்கழிவுகளை அப்புறப்படுத்தி மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனக் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு குப்பைகளை கொண்டுசெல்வதில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து, இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஏறாவூர் நகர சபையில் திங்கட்கிழமை (3) நடைபெற்றது.
மட்டக்களப்பு நகர், ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர், செங்கலடி ஆகிய பகுதிகளிலுள்ள குப்பைகளைத் தரம் பிரித்து, அவற்றைக் கொடுவாமடுவில் அமைக்கப்பட்டுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ மீள்சுழற்சி நிலையத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று மாகாண முதலமைச்சர் பணித்துள்ளார்.
அத்துடன், மேற்படி நகர மற்றும் பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள கழிவுகளை அகற்றும் செயற்பாடு தொடர்பில் அதிகாரிகள் துரிதமாகச் செயற்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago