Suganthini Ratnam / 2017 மார்ச் 23 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
யுத்தத்துக்குப் பின்னர் வடமாகாணமானது போதைப் பாவனையால் அழிந்துவரும் அதேவேளை, தற்போது கிழக்கு மாகாணத்திலும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
செங்கலடியில் புதன்கிழமை (22) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'தேர்தலின்போது போதை அற்ற நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று கூறியே இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
எனவே, மட்டக்களப்பில் மூடப்பட்டுக் காணப்படும் வாழைச்சேனை காகித ஆலை, ஓட்டுத் தொழிற்சாi ஆகியன நல்லாட்சில் திறக்கப்பட்டு பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதுடன், இவற்றின் மூலம் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமும் உயர்த்தப்படும் என்ற பல எதிர்பார்ப்புகளுடன் நாங்கள் இருந்தோம். ஆனால், இங்கு நிலைமை மாறாக உள்ளது' என்றார்.
'மதுபானசாலைகளை அமைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதி வழங்காது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், மட்டக்களப்பில் 20 மதுபானசாலைகள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 53 மதுபானசாலைகள் இருக்கின்றன.
இந்நிலையில், இங்கு மதுபானசாலைகளைத் திறப்பதற்கான அனுமதி வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள், அவர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இருப்பினும், அவர்களின் கோரிக்கைகளுக்கு மாறாக மதுபானசாலைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 450 கோடி ரூபாய் செலவில் கல்குடாவில் மதுபானசாலைக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது. இதற்கு வாழைச்சேனை பிரதேச சபைச் செயலாளர் இரண்டு தடவைகள் சட்டத்தரணி ஊடாக தடையுத்தரவு அனுப்பியிருந்தார். அதனையும் மீறி கட்டட வேலைகள் நடைபெறுகின்றன' என்றார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago