Suganthini Ratnam / 2016 ஜூன் 16 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கை விஸ்தரிப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட 300 பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் 16,000 மரமுந்திரிகைக் கன்றுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு -திருகோணமலை பிராந்திய முகாமையாளர் ரி.டேவிட் நிதர்ஷன் தெரிவித்தார்.
இதுவரைகாலமும் இம்மாவட்டத்தில்; சுமார் 8,000 ஏக்கரில் மரமுந்திரிகைச் செய்கை பண்ணப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தச் செய்கை மேலும் 400 ஏக்கரில் விஸ்தரிப்புச் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக ஒரு ஏக்கரில் 40 கன்றுகள் படி 400 ஏக்கரில் 16,000 கன்றுகள் நடப்படவுள்ளன.
வாகரையில் 60 ஏக்கரிலும் வாழைச்சேனையில் 30 ஏக்கரிலும் கிரானில் 20 ஏக்கரிலும் செங்கலடியில் 60 ஏக்கரிலும் ஏறாவூரில் 20 ஏக்கரிலும் மட்டக்களப்பில் 14 ஏக்கரிலும் ஆரையம்பதியில் 46 ஏக்கரிலும் களுவாஞ்சிக்குடியில் 30 ஏக்கரிலும் வெல்லாவெளியில் 30 ஏக்கரிலும் பட்டிப்பளையில் 40 ஏக்கரிலும் வவுணதீவில் 50 ஏக்கரிலும் செய்கைக்கான ஆரம்பக்கட்டத் தெரிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்; அவர் கூறினார்.
மரமுந்திரிகைச் செய்கையின் அறுவடை ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேற்கொள்ளப்படுகின்றது. மாவட்டத்திலிருந்து வருடம் ஒன்றுக்கு 200 தொடக்கம் 300 மெட்றிக்தொன் மரமுந்திரிகை விதைகள் அறுவடை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

45 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
4 hours ago