2025 மே 08, வியாழக்கிழமை

'புரிந்துணர்வை ஏற்படுத்துவதே சமாதானக் கல்வியின் நோக்கம்'

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மாணவர் மட்டத்தில் சமூக கலாசார விழுமியங்கள் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்துவதே சமாதானக் கல்வியின் பிரதான நோக்கமாகும் என மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சமாதானக்கல்வி இணைப்பாளர் எம்.ஜி.ஏ.நாஸர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலய மண்டபத்தில் சனிக்கிழமை(05) மாலை நடைபெற்ற நத்தார் கொண்டாட்ட கலை, கலாசார விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
உலகம் சமாதான பூமியாக வேண்டும் என்பது எமது எண்ணத்தின் இலக்காக இருக்கிறது.அதற்காக எமக்குள் நாம் முதலில் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் மாணவர்கள் முக்கியபாத்திரம் வகிப்பதாக அரசாங்கம் கருதுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் கடந்த கால அசாதாரண சூழ்நிலையின்போது இனரீதியாகப் பிரிந்து முட்கம்பி வேலிகளால் வாழ்இடத்தை வரையறைசெய்து வசித்துவந்த விரும்பத்தகாத காலம் இப்போது மாறிவிட்டது.

தமிழ் மொழியை பேசுகின்ற மக்களிடையே இவ்வாறான நிலைகாணப்பட்டமை துர்ப்பாக்கியமாகும். தற்காலத்தில் யுத்தம் முடிந்துவிட்ட போதிலும் நாட்டில் நிரந்தர சமாதானம் உதயமாகவில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X