Suganthini Ratnam / 2016 ஜூன் 19 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்,அபூ செய்னப்
கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் அடைவு மட்டத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது பிரதேசத்தில் வாழும் அனைவரையும் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் நேற்று சனிக்கிழமை (18) இரவு நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கடந்த காலங்களில் மணவர் அடைவு மட்டத்தில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தில் காணப்பட்டது. இம்முறை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் 7ஆம் இடத்துக்கு பின்தங்கிய நிலையில் காணப்படுவது வேதனையளிக்கிறது. இந்த பின்னடைவுக்கான காரணிகளை கண்டறிந்து நிவர்த்தி செய்து எதிர்வரும் காலங்களில் முன்னிலைக்கு கொண்டுசெல்வது அனைவரதும் கடமையாகும்.
வலயத்தினை முன்னேற்றுவது தொடர்பாக அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். நான் இவ்வாறு கூறுவது யாரையும் குறை கூறுவதற்கோ அல்லது பிழை பிடிப்பதற்கோ அல்ல. மாறாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் தியாக சிந்தனையுடன் இந்த கல்வி வலயத்தின் தரத்தினை உயர்த்தி எதிர்காலத்தில் பல சாதனைகளின் மையமாக மீண்டும் மத்தி வலயத்தை உருவாக்கவேண்டும்.
நடந்து முடிந்த அதிபர்களுக்கான பரீட்சையில் எமது பிரதேசத்தில் 14 பேர் சித்தி பெற்றுள்ளனர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்கள் இப்பிரதேசத்தின் சொத்துக்கள் பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து கற்று வந்தவர்கள் எனவே இப்பிரதேசத்தில் கல்வி வளர்ச்சிக்கு இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்' என்று கூறினார்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago