Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
ஐக்கிய நாடுகள் சபையின் கருத்துக் கணிப்பின்படி 4 மனிதர்களுள் ஒருவர் உள ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ பாதிக்கப்பட்டு விசேட தேவையுடைய மாற்றுத் திறனாளியாகக் காணப்படுகின்றனர் என கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளின் கலை, கலாசார நிகழ்வுகளும் மற்றும் மாற்றுத் திறனாளிகளைக் கொண்டுள்ள சிறந்த சேவை நிறுவனங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையானது 1992ஆம் ஆண்டு முதன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்டாக பிரகடனப்படுத்திய போதும், சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளைப் பற்றி குறைவான விழிப்புணர்வு காணப்படுவதனால் ஐ. நா. சபையானது கடந்த 2014ஆம் ஆண்டை நீடித்து நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி என பிரகடனப்படுத்தியபோதும், 2015ஆம் ஆண்டை உட்படுத்துகை ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதில் கல்வி, தொழில், சுகாதாரம், கலை, கலாசாரம் மற்றும் அரசியலில் சம வாய்ப்பு வழங்கவும் எல்லோரையும் போல் மாற்றுத் திறனாளிகளையும் உள்வாங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அத்தோடு 3 உப தலைப்புக்களில் நகரங்களை உள்வாங்கலுக்கும் அணுகுவதற்கும் பொருத்தமானதாக அமைத்தல். இதன்கீழ் 2050ஆம் ஆண்டில் உலக சனத்தொகையில் 60 வீதமானவர்கள் வாழும்போது, இயற்கை அல்லது செயற்கையின் செயற்பாட்டால் அனைவரும் மாற்றுத்திறனாளியாக மாற வேண்டி வரும்.
உடல் குறைபாடு தொடர்பான தரவுகள்,புள்ளி விபரங்களை முன்னேற்றல்,கண்ணுக்கு புலப்படாத உடல் குறைபாடுகளை கொண்டுள்ளவர்களையும் சமூகத்துக்குள்ளும் அபிவிருத்தியினுள்ளும் உட்சேர்த்தலாகும் என்றார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. கருணாகரன், கமிட் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் கே.எம்.எம். கலீல், சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
39 minute ago
41 minute ago
1 hours ago