Gavitha / 2016 ஜூன் 11 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன், பேரின்பராஜா சபேஷ்
'மாற்றுத் திறனாளிகளை வளமூட்டுவதில் மேலைத்தேசம் மேல்நோக்கிச் சென்று விட்டது' என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (10), மாற்றுத் திறனாளிகளுக்காக இடம்பெற்ற 'நிமிர்ந்து நில்' விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'தமிழ்த் தலைவர் எம். சிவசிதம்பரம் ஐயா அவர்கள், நாடாளுமன்ற தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டு சக்கர கதிரையலேயே நாடாளுமன்றத்துக்குச் சென்றார். அப்பொழுதும் கூட, இது தேவைதானா என்று பலர் கேட்டிருந்தனர்.
ஆனால், நான் கைகளாலும் கால்களாலும் சிந்திப்பதில்லை, சிந்திப்பதற்கு எனக்கு மூளையே தேவை என்று அவர் கூறியிருந்தார்' என்று அவர் கூறினார்.
'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது போல, இந்த நாடாளுமன்றத்தில் எனது சிரசைப் பாவித்து சிந்தனைகளை வெளிப்படுத்துவேன் ஆகையினால் நடக்க முடியாமலுள்ளது எனது சிந்தனையோட்டத்துக்கு ஒரு குறைபாடல்ல என்று அவர் கூறியிருந்தார்' என்று அவர் குறிப்பிட்டார்.
'அவ்வாறே மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் அவர்களும் சிறந்த புத்தி ஜீவிகளாகவும் மேதைகளாகவும் இருந்திருப்பதை நாம் வரலாற்றில் கண்டு வருகின்றோம். மாற்றுத் திறனாளிகளை அரவணைத்து ஆர்வமூட்டுவதனூடாக அவர்களையும் இந்த நாட்டின் வளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம், குடும்பம், சமூகம் நாடு என்று அதன் அபிவிருத்தி நன்மைகள் வியாபித்து நிற்கும்' என்று அவர் கூறினார்.


46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago