Suganthini Ratnam / 2017 மார்ச் 29 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
ஏறாவூர்ப்பற்றில் வயல்வெளிகளுக்குச் செல்லும் வீதிகள் ஊடாக மணல் அகழ்ந்துகொண்டு வாகனப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கரடியனாறு, கணங்குளமடு கமநல அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கத்துக்கு செவ்வாய்க்கிழமை (28) மேற்படி அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்திலேயே, அவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'ஏறாவூர்ப்பற்றில் சின்னப் பொத்தானை, கணங்குளமடு, புத்தம்புரி ஆகிய வீதிகள் ஊடாக மணல் அகழ்ந்துகொண்டு செல்லும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
தற்போது புத்தம்புரி குளக்கட்டு மற்றும் அதன் அருகிலுள்ள வயல்வெளிகள்; ஊடாகவும் மணல் அகழ்ந்துகொண்டு செல்லப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
வயல்வெளிகளுக்கு விவசாயிகள் செல்லும் வீதிகள் மற்றும் குளக்கட்டை மணல் அகழ்ந்துகொண்டு செல்வதற்குப் பயன்படுத்துவதால், வீதிகளும் குளக்கட்டும் சேதமடையும் நிலைமை உள்ளது.
வயல்வெளிகளுக்குச் செல்லும் வீதிகள் மற்றும் குளக்கட்டுகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு விவசாயிகள் மாத்திரமின்றி அனைவருக்கும் உண்டு. எனவே, வயல்வெளிகளுக்குச் செல்லும் வீதிகள் ஊடாக மணல் அகழ்ந்துகொண்டு செல்வதைத் தடுக்குமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago