Suganthini Ratnam / 2016 ஜூன் 10 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்வதற்கு தாமதியாது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிப்பு பாததைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் தொங்கவிடப்பட்டுள்ளன.
இந்தப் பதாதைகள் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச அலுவலகங்களில் தொங்க விடப்பட்டுள்ளன.
'தகைமையுடைய அனைத்து பிரஜைகளையும் உள்ளடக்கிய தேருநர் இடாப்பொன்று, உங்களது பெயரை தேருநர் இடாப்பில் பதிவு செய்துகொள்வதற்கு தாமதியாது நடவடிக்கை எடுக்கவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் செய்தியொன்றாகுமென' அந்த அறிவிப்பு பதாதையில் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாண்டுக்கான (2016) வாக்காளர் இடாப்பு பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது. கிராம உத்தியோகத்தர்களினால்; இந்த பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
31.5.1998ஆம் திகதிக்கு முன்பு பிறந்த 18 வயதை பூர்த்தி செய்த அனைவரும் இந்த வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாண்டுக்கான (2016) வாக்காளர் இடாப்பு பதிவு செய்யும் நடவடிக்கை கடந்த மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பதிவு நடவடிக்கைள் இம்மாதம் (ஜுன்) இறுதிப்பகுதியில் நிறைவடையவுள்ளது.
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago