Princiya Dixci / 2017 மார்ச் 05 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
முரண்பட்டு நிற்கும் ஹசன் அலி தரப்புடன் இணைய வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும், தனக்குக் கிடையாது என, கிழக்கு மாகாண சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
'ஷிப்லி பாறூக், ஹசன் அலியுடன் இணையவிருப்பதாக வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளுக்குத் தனது மறுப்பை தெரிவிக்கும் வகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்து, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“நான் தற்பொழுது அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினைப் பலப்படுத்துவதற்கும் தற்போது மக்கள் மத்தியில் எனக்கும் கட்சிக்கும் இருக்கும் ஆதரவினை மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அரசியல் வங்குரோத்தர்கள் இவ்வாறான போலிப் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார்கள்.
“அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கும் ஹசன் அலிக்கும் பிரச்சினைகள் தோற்றம்பெற்ற நாளிலிருந்து நான், ஒரு சந்தர்ப்பத்தில் கூட ஹசன் அலியுடன் பேசியதோ, அவருடன் தனிப்பட்ட வகையில் சந்திப்புக்களை மேற்கொண்டதோ கிடையாது.
“மேலும், இவ்வாறு ஆதாரமற்ற முறையில் அரசியல்வாதிகளுடன் செய்திகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கும்போது, அதனை சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகளிடமோ அல்லது அவர்களுக்கு பொறுப்பான ஊடகப்பிரிவிடமோ, செய்தியின் உண்மைத் தன்மையினை கேட்டறிந்து பிரசுரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
7 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago