2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆரையம்பதி காணி பிரச்சினை: ஆராய 5 பேர் கொண்ட குழு நியமனம்

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று - ஆரையம்பதிப் பிரதேசத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்  திஙகட்கிழமை (18) காலை ஆரம்பமானது. இக்கூட்டத்திலேயே  இம் முடிவு அறிவிக்கப்பட்டது.

இந்தக்குழுவில், மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், காணி
உதவி ஆணையாளர் நஜீம், நில அளவைகள் திணைக்கள அத்தியட்சகர் ஆகியோர் அடங்குகின்றனர்.

நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவானது  இரண்டு வாரங்களுக்குள் இந்தப்பிரச்சினைகள் குறித்த மனுக்களை ஏற்றுக் கொண்டு அதன் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், பிரதி அமைச்சர்கள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கூடி ஆராய்வது என்றும் அது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
 
மண்முனைப்பற்று - ஆரையம்பதி பிரதேச செயலயகப்பிரிவுக்குள் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்ட நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூடு;டத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. இந்த அமளியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .