2025 மே 01, வியாழக்கிழமை

பிக்குவின் செயற்பாட்டை கண்டித்து 14 பிரதேச செயலகங்களில் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 நவம்பர் 28 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌத்த தேரரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  14 பிரதேச செயலகங்களிலும் பகிஸ்கரிப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு - பட்டிப்பளை பிரதேச செயலகம் உள்ளிட்ட 14 பிரதேச செயலகங்களிலும் பகல் 12.05க்கு வேலைப்பகிஸ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுகொண்டிருக்கின்றது.

மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் நேற்று பதன்கிழமை புகுந்து வன்முறையில் ஈடுபட்டமைக்கும், பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளினால் ஏசியமை, தவறான தகவல்களை வெளியிட்டமை உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதே நேரம், நேற்றைய தினம் பகல் முதல் பட்டிப்பளை பிரதேச செயலகம் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • VALLARASU.COM Thursday, 28 November 2013 07:52 AM

    நாங்க யாரு?!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .