2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

காத்தான்குடி பிரதான வீதியில் 22 வருடங்களின் பின்னர் பெருநாள் பஸார்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

சுமார் 22 வருடங்களின் பின்னர் காத்தான்குடி பிரதான வீதியில் இம்முறை புனித ஹஜ்ஜூப் பெருநாள் பஸார் அமைக்கப்படவுள்ளதாக காத்தான்குடி அஷ்ஷெய்யித் ஷெயின் மௌலானா பள்ளிவாயல் பிரதம நம்பிக்கையாளர் ஏ.எம்.அப்துர் றவூப் தெரிவித்தார்.

கடந்த 1990ஆம் ஆண்டு கிழக்கில் ஏற்பட்ட இனவன்முறைகளை அடுத்து பல்லாண்டுகாலமாக காத்தான்குடி பிரதான வீதியில் நடாத்தப்பட்டுவந்த பெருநாள் பஸார் - புதிய காத்தான்குடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயில் நிர்வாகத்தின்கீழ் பாதுகாப்பு கருதி புதிய காத்தான்குடிக்கு மாற்றப்பட்டது. அதனால் கடற்கரை வீதியிலும் ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திலும் நடாத்தப்பட்டு வந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள அமைதிச்சூழலினால் மீண்டும் 22 வருடங்களின் பின்னர் பெருநாள் பஸார் இம்முறை பிரதானவீதி பஸ்மலாச் சந்தியில் நடாத்தப்படவுள்ளது.

இதுதொடர்பான உடன்பாடு காத்தான்குடி நகரமுதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் முன்னிலையில் ஷெயின் மொலானா பள்ளிவாயல் மற்றும் புதிய காத்தான்குடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் ஆகிய பள்ளிவாயல்களின் நிர்வாகிகளுக்கிடையே காணப்பட்ட இணக்கப்பாட்டையடுத்து சுழற்சி அடிப்படையில் புனித ஹஜ்ஜூப் பெருநாள் மற்றும் புனித நோன்பு பெருநாள் ஆகிய இருபெருநாள் பஸார்களை பிரதான வீதியிலும் அதேபோன்று அடுத்த வருடம் இரு பெருநாள் பஸார்களை கடற்கரைவீதியில் நடாத்துவெதெனவும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய எதிர்வரும் புனித ஹஜ்ஜூப்பெருநாள் பஸார் பிரதான வீதியில் 22 வருடங்களுக்குப் பின்னர் இடம்பெவுள்ளமை குறிப்பித்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .