2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டு.வாவியில் மாதாந்தம் 40 ஆயிரம் கிலோ இறால் பிடிக்கப்படுகின்றன

Kogilavani   / 2013 நவம்பர் 19 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.எல்.ஜவ்பர்கான்

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் இறால் பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்தம் 40 ஆயிரம் கிலோ இறால் பிடிக்கப்படுவதாக கடற்றொழில் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி பணப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இம்மாவட்டத்தில் காத்தான்குடி, ஊறணி, பிள்ளையாரடி உட்பட பல வாவிக்கரை பிரதேசங்களில் தினமும் 250 தோணிகள் இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளன.

ஒவ்வொரு தோணியின் மீனவரும் 6 கிலோ முதல் 7 கிலோ வரை இறாலை தினமும் பிடிக்கின்றனர்.

தற்போது பல இடங்களிலும் தெருவோரங்களில் அதிகமான இறால்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .