2026 மே 07, வியாழக்கிழமை

காத்தான்குடியில் கைதான புகலிடக் கோரிக்கையாளர்கள் 10 பேருக்கும் விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜூன் 14 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவர்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற நிலையில் காத்தான்குடியில் வைத்து கைதுசெய்யப்பட்ட  10 பேரையும் எதிர்வரும்  18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் எம்.ஐ.எம்.நூர்தீன் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு தயாராகவிருந்த 10 இளைஞர்களை காத்தான்குடி பொலிஸார் நேற்று முன்தினம்; புதன்கிழமை மாலை கைதுசெய்தனர்.

இவர்களுடன் இவர்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கு தயார்படுத்திய காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கைதானவர்கள் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி எம்.ஐ.எம்.நூர்தீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .