2025 மே 03, சனிக்கிழமை

மட்டு. மாவட்ட அபிவிருத்திக்கு 1,568 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Super User   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால 1,568 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த நிதியின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் கூட்டமொன்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடியிலுள்ள அவரின் பிராந்திய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், ஏறவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபையின் தலைவர் எம்.ஹமீட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக ஆராயப்பட்டன. இந்த நிதி மாவட்டத்திலுள்ள 345 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் மாவட்டத்திலுள்ள சனத்தொகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டும் என பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த நிதியின் மூலம் சுகாதாரம், குடிநீர், சுற்றுல்லாதுறை, தொழில் கல்வி, விவாசயம், சிறிய நீர்ப்பாசனம், மீன்பிடி, உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X